பணி பகிஷ்கரிப்பால் மன உளைச்சலுக்கு உள்ளான மருத்துவர்!

0
623
doctor decision related SNCF strike

பிரான்ஸில் நடக்கும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பினால் தாம் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், இனிமேல் SNCF ஊழியர்களுக்கு தாம் வைத்தியம் செய்யமாட்டேன் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்த தகவல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.doctor decision related SNCF strike

பிரான்ஸ் நாட்டு சட்டத்தின்படி, மருத்துவர் ஒருவர் எந்த காரணத்தை கொண்டும் நோயாளியை பார்க்காமல் விடமுடியாது. இது ஒரு பக்கமிருக்க, Seine-et-Marne இன், Pontault-Combault நகரிலுள்ள 57 வயதுடைய மருத்துவர் ஒருவர் SNCF ஊழியர்களுக்கு தாம் மருத்துவம் செய்யமுடியாது என எழுதி, அவரது மருத்துவமனையில் அறிக்கை பலகையில் வைத்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, SNCF ஊழியர்களை பொது போக்குவரத்தில் மருத்துவமனைக்கு செல்லுங்கள் எனவும் கோரியுள்ளார். மிகவும் மன உளைச்சலுக்கு தாம் ஆளாகியுள்ளதாகவும், பணி பகிஷ்கரிப்பினால் நோயாளிகள் பலர் சிரமங்களுக்கு ஆளாகுவதாகவும் குறித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவர் இதுவரை SNCF ஊழியர் நோயாளிகளாக தன்னிடத்தில் வரவில்லை எனவும், இதுவரை அப்படி யாரையும் பார்க்காமல் திருப்பி அனுப்பவில்லை எனவும், மன உளைச்சல் தான் இதுபோல் அறிக்கை விடுத்துள்ளேன் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**