உலகையே வியக்க வைத்த கொழும்பு நட்சத்திர ஹோட்டலின் குளியலறை

0
529

உலகின் தலைசிறந்த ஊடகங்கள் ஆண்டுக்கொருமுறை உலகின் சிறந்த கட்டிட வடிவமைப்புகளை தர நிலைப்படுத்தி வெளியிடுவது வழமை. (Colombo Star Hotel Moven Pick Hotel Wash Room GOt Ranked Worldwide)

அந்தவகையில் உலகின் மிக அழகான இயற்கை காட்சிகளை கொண்ட குளியலறைகள் சிலவற்றை பிரித்தானிய ஊடகமொன்று பட்டியலிட்டுள்ளது.

குளியறை அமைந்துள்ள இடத்தை சுற்றி சிறப்பான இயற்கை காட்சிகள் அமைந்திப்பதனை கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கு விருப்பமான முறையில் தங்கள் பயணிக்க வேண்டிய இடங்களை தெரிவு செய்வதற்கு இந்த பட்டியல் உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது.

அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை குளியலறை ஒன்றும் இடம்பிடித்துள்ளது. அண்மையில் கொழும்பில் திறக்கப்பட்ட Movenpick என்ற 5 நட்சத்திர ஹோட்டலின் குளியறையே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

24 மாடிகளை கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தமாக 219 அறைகள் உள்ளது. ஒவ்வொரு அறைக்கும் தனியான ஒரு குளியலறை உள்ளது. அந்த குளியலறையில் இயற்கை அழகு நிறைந்த காட்சிகள் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த பட்டியலில் இடம்பிடிக்க இலங்கைக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

Tag: Colombo Star Hotel Moven Pick Hotel Wash Room GOt Ranked Worldwide