பிரான்ஸில் நடந்த Dinner in white!

0
668
17000 participated France Dinner In_White

இந்த ஆண்டிற்கான பொப்-அப் பாணியிலான “Dinner in white” நிகழ்ச்சி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதற்கு 17,000 பேர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். 17000 participated France Dinner In_White

கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 3), வருடாந்த “Dinner in white” சுற்றுலா பாரிஸில் Esplanade des Invalides இல் நடந்தது. முந்தைய ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி Notre Dame Cathedral மற்றும் லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வெளியே நடந்தது.

இந்த வருடம் ஞாயிறு வரை அந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி கிடைக்காமல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

அன்று வருகைதந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முந்தைய கூட்டங்களின் போது வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் இருமடங்காக இருந்தது. மொத்தம் 17,000 பார்வையாளர்களில் வெளிநாட்டிலிருந்து மட்டும் 6,000 பேர் கலந்து கொண்டனர். இதில் பலர் இச் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே பாரிஸுக்கு வந்திருந்தனர்.

“Dinner in white” நிகழ்வு இந்த வருடம் அதன் 30 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த எண்ணக்கரு பிரான்ஸிலே முதலில் தொடங்கியது. ஆனால் பின்னர் நியூயோர்க் மற்றும் சிட்னி உள்ளிட்ட உலகின் பிற நகரங்களுக்கும் பரவியது.

மேலும் இதில் கலந்துகொள்வோர் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். அந்த விதிகளில் ஒன்று வெள்ளை நிறத்தில் உடை அணிய வேண்டும். அவர்கள் அங்கு குப்பைகள் போட முடியாது. மேலும் மதுபானங்கள் கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**