”சம்பளம் இல்லாவிடின் தொடர்களை புறக்கணிப்போம்” : சிம்பாப்வே வீரர்கள்

0
503
Zimbabwe players threat ZC 2018 news Tamil

சிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டோம் என கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிம்பாப்வே கிரிக்கெட் சபை வீரர்களுக்கான மூன்று மாத சம்பளப்பணம் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை தொடருக்கான போட்டிக் கட்டணம் என்பவற்றை வீரர்களுக்கு இதுவரை வழங்கவில்லை.

இதன் காரணமாக சிம்பாப்வே வீரர்கள் சம்பளப்பணம் மற்றும் இலங்கை தொடருக்கான கட்டணம் வழங்கப்படாவிட்டால் பயிற்சிகளில் கலந்துக்கொள்ள மாட்டோம் என தங்களுடைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி எதிர்வரும் ஜுன் 25ம் திகதிக்கு முதல் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை சிம்பாப்வே கிரிக்கெட் சபை கொடுக்க மறுத்தால், ஜுலை மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் நடைபெறவுள்ள முக்கோண இருபதுக்கு-20 தொடர் மற்றும் அதனையடுத்து ஏற்பாடு செய்யப்படவுள்ள பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் என்பவற்றில் விளையாட மாட்டோம் என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் சிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள லால்சாந் ராஜ்பூட் அடுத்த வாரம் சிம்பாப்வே அணியுடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

Zimbabwe players threat ZC 2018 news Tamil, Zimbabwe players threat ZC 2018 news Tamil