5 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது

0
525
tamilnews Sri Lankan arrested foreign currency worth 47 million

(tamilnews Sri Lankan arrested foreign currency worth 47 million)

4 கோடியே 73 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு எடுத்து செல்ல முனைந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து அமெரிக்க டொலர்கள், யூரோ, ஜப்பானிய யென், நோர்வே க்ரோன் மற்றும் சவுதியின் ரியால் உள்ளிட்ட நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, ஈரானைச் சேர்ந்த பிறிதொரு 50 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் 350,000 ரூபா தாள்கள், 8000 அமெரிக்க டொலர் தாள்கள், 2000 மலேசிய ரிங்கித் நாணயங்கள் என்பவற்றை கடத்த முனைந்த சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாலை டுபாய் நோக்கி செல்லவிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(tamilnews Sri Lankan arrested foreign currency worth 47 million)

More Tamil News

Tamil News Group websites :