கோடாரியுடன் மிரட்டிய சிரிய நபர் உயிரிழப்பு

0
544
Syrian ax waver dies shoot, Syrian ax waver dies, Syrian ax waver, ax waver dies shoot, ax waver dies, Tamil Netherland News, Netherland Tamil news

புதனன்று காலை 26 வயது சிரியா நாட்டைச் சேர்ந்த நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு நபர் பொலிசாரால் சுடப்பட்டார்.Syrian ax waver dies shoot

இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தியிருக்கிறார்.

அந்நபர் பற்றிய புகாரை அடுத்து பகல் 1.30 மணியளவில் அந்த குடியிருப்பிற்கு சமூகமளித்த பொலிசார் அந்நபரை அமைதி படுத்த பல மணி நேரம் முயன்றும், அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. அந்நபர் SWAT அணியைத் தாக்கி, அங்கிருந்த ஒரு பொலிஸ் நாயை மோசமாக காயப்படுத்தினார். இதன் போது, ஒரு அதிகாரி அவரை சுட்டார். போலீஸ் நாய் அதன் காயங்களால் இறந்து போனது.

சந்தேக நபரை பொலிசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொலிசார் அவரைப் பற்றி மேலும் அறிய அவரது கணினிகளை சோதித்தனர். ஆனால் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என பின்னர் தெரிய வந்தது

அந்நபர் சிரிய நாட்டை சேர்ந்தவர் என்றும், கடந்த ஆண்டு முதல் அவரது தந்தையுடன் இணைந்து இந்த குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார் என தெரிய வந்துள்ளது.

இது பற்றி நகர மேயர் கூறுகையில், இவர் போன்று சிரியாவை சேர்ந்த பலருக்கும், மனநிலை பாதிப்பு உள்ளது என தெரிவித்தார். அந்நபரை சுட்ட பொலிசாரிடம் உத்தியோகப்பூர்வ விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Syrian ax waver dies shoot, Syrian ax waver dies, Syrian ax waver, ax waver dies shoot, ax waver dies, Tamil Netherland News, Netherland Tamil news

 

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்