ஆர்யாவை தொடர்ந்து விஜய் டிவி யிலும் ஆரம்பித்துள்ள ‘எங்க வீட்டுப் பொண்ணு!’

0
455

(VillaToVIllage Contestants Makeover Bride Yesterday Show)

இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வில்லா-டு-வில்லேஜ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வரன் தேடும் படலம் நடைபெற்றிருந்தது.

விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியில் உள்ள பெண்களுக்கு ஆண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் மாறியது.

நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக விஜய் டிவியின் ஸ்டார்ஸ் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ரியோவும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை மேலும் கலகலப்பூட்டினார்.

பெண்கள் பாரம்பரிய புடவையில் அசல் தமிழ் மணப்பெண் போல காட்டிச்சியளித்தனர். ஒவ்வொருவராக வந்து தமக்கு எவ்வாறான ஆண்மகன் வேண்டும் என்று கூறி வந்திருந்தவர்களில் தனக்கு பிடித்த ஒரு ஆணுடன் நடனம் ஆடிவிட்டு மீண்டும் அவர்களின் வீட்டுக்குள் சென்றனர்.

Tag: VillaToVIllage Contestants Makeover Bride Yesterday Show