அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா? : ஐ.பி.எல். ரகசியம் வெளியானது!!!

0
318
ipl 2018 coaches salary news Tamil

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். அணிகளில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென ஒரு பயிற்றுவிப்பாளர்களையும், பயிற்றுவிப்பு குழாமையும் வைத்திருக்கின்றன. வீரர்களின் சம்பளம் வெளிப்படையாக இருக்கும் போது, பயிற்றுவிப்பாளர்களுக்கான சம்பளத் தொகை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

ஆனால் தற்போது ஐ.பி.எல். தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பெங்களூர் அணியின் பயிற்றுவிப்பாளர் டேனியல் விட்டோரிதான் அதிகம் சம்பளம் வாங்குகின்றார் என தெரியவந்துள்ளது. இவருக்கு இந்திய ரூபாயில் 4 கோடி ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. அவருடன் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படும் அஷிஷ் நெஹ்ராவுக்கும் அதே தொகை வழங்கப்படுகிறது.

அதிகம் சம்பளம் வாங்கும் பயிற்றுவிப்பாளர்களின் விபரம் இதோ…!

 • டேனியல் விட்டோரி – 4 கோடி
 • அஷிஷ் நெஹ்ரா – 4 கோடி
 • ரிக்கி பொண்டிங் – 3.7 கோடி
 • ஸ்டீபன் பிளமிங் – 3.2 கோடி
 • வீரேந்திர செவாக் – 3 கோடி
 • ஷேர்ன் வோர்ன் – 2.7 கோடி
 • மஹேல ஜயவர்தன 2.25 கோடி
 • ஜெக் கலீஸ் – 2.25 கோடி
 • டொம் மூடி – 2 கோடி
 • வீவிஎஸ் லக்ஸ்மன் – 2 கோடி
 • கெரி கிரிஸ்டன் – 1.5 கோடி
 • லசித் மாலிங்க – 1.5 கோடி

<<Tamil News Group websites>>

ipl 2018 coaches salary news Tamil, ipl 2018 coaches salary news Tamil, ipl 2018 coaches salary news Tamil