தந்தையை இழந்த சோகத்துடன் மே.தீவுகள் பறந்தார் தனஞ்சய டி சில்வா!!!

0
344
dhananjaya de silva latest news Tamil

(dhananjaya de silva latest news Tamil)

இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மே.தீவுகளுக்கு சென்றடைந்துள்ளார்.

குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிக்கான இலங்கை அணிக்குழாம் மே.தீவுகள் சென்றடைந்துள்ள நிலையில், தனஞ்சய டி சில்வா அவரது தந்தை உயிரிழந்ததன் காரணமாக அணியுடன் செல்லவில்லை.

எனினும் நேற்றைய தினம் தனஞ்சய டி சில்வா மே.தீவுகள் புறப்பட்டுள்ளார்.

தனஞ்சய டி சில்வாவின் தந்தையை அடையாளந்தெரியாத சிலர் இரத்மலானை ஞானேந்தர வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>