பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஆப்கானிஸ்தான்!!!

0
405
afghanistan vs bangladesh 1st T20 news Tamil

(afghanistan vs bangladesh 1st T20 news Tamil)

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் நேற்று மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி மொஹமட் சேஷாட், சமினுல்லா சென்வாரி மற்றும் சபிகுல்லா ஆகியோரின் அதிரடியின் உதவியுடன் 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மொஹமட் சேஷாட் 40 ஓட்டங்களையும், சமினுல்லா சென்வாரி 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, சபிகுல்லா 8 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை விளாசினார்.

பங்களாதேஷ் அணிசார்பில் மொஹமதுல்லா மற்றும் அபுல் ஹாசன் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ரஷீட் கான் மற்றும் ஷபூர் ஷர்டான் ஆகியோரின் பந்து வீச்சில் சிக்கி 122 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பங்களாதேஷ் அணிசார்பில் அதிகபட்சமாக மொஹமதுல்லா 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணிசா்பில் ரஷீட் கான் மற்றும் ஷபூர் ஷர்டான் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.

<<Tamil News Group websites>>