சிரேஷட்ட நிலை பதவி மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தீர்மானிக்கும் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

0
372
srilanka freedom party central board meeting today Lankan latest news

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷட்ட நிலை பதவி மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தீர்மானிக்கும் விசேட மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. srilanka freedom party central board meeting today Lankan latest news

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதற்காவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

அத்துடன், அகில இலங்கை செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பனவும் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.

அதன்போது தற்காலிக நிர்வாக குழுவொன்றை நியமித்து கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இன்று இடம்பெறவுள்ள விசேட மத்திய குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதற்கான அனுமதி பெறப்படவுள்ளதாக, கட்சியின் பொருளாலர் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான குமார் வெல்கம, பவித்ரா வன்னியாராச்சி, சீ.பி ரத்நாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு இன்று இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

கட்சியின் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளும் பொருட்டான இந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்படுமாயின் அதில் தாம் பங்குகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
srilanka freedom party central board meeting today Lankan latest news

More Tamil News

Tamil News Group websites :