மக்கள் காணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக குற்றச்சாட்டு

0
396
People allege Department Archeology taking measures under control

(People allege Department Archeology taking measures under control)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாற்று பாலம் தொடக்கம் கோம்பா சந்தி வரையிலான சுமார் 4 கிலோமீற்றர் நீளமான பகுதியை தொல்பொருள் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேற்றய தினம் மேற்படி பகுதியில் தொல்பொருள் திணைக்களம் தனது நடுகற்களை நாட்டியுள்ளது.

மேற்படி நாயாறு, கொக்கிளாய் உள்ளிட்ட எல்லைக் கிராமங்களில் தென்னிலங்கை சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இது போதாதென தொல்லியல் திணைக்களமும் தாங்கள் நினைத்தாற் போல் காணிகளை அபகரித்துக் கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும், தற்போது தொல்பொருள் திணைக்களம் அபகரித்துள்ள பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும், கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களின் காணியில் அடாத்தாக தங்கியிருந்து பௌத்த விகாரை அமைத்துவரும் பௌத்த பிக்குவின் தங்குமிடத்திலேயே தொல்லியல் திணைக்கள ஊழியர்கள் தங்கியிருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

(People allege Department Archeology taking measures under control)

More Tamil News

Tamil News Group websites :