துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!

0
391
West indies President XI vs Sri Lanka prectice match drawn

(West indies President XI vs Sri Lanka prectice match drawn)

மே.தீவுகள் பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 428 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 135 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டி நிறுத்தப்பட்டது.

முதல் இன்னிங்ஸில் சந்திமால் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, டிக்வெல்ல 74 ஓட்டங்களை பெற்றார். மே.தீவுகள் அணிசார்பில் ஹரிகன் 4 விக்கட்டுகளையும், கார்ன்வேல் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி சார்பில் கெம்பல் 60 ஓட்டங்களையும், பவெல் 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அகில தனஞ்சய, டில்ருவான் பெரேரா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் குசால் மெண்டிஸ் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில், தற்போது டெஸ்ட் பயிற்சிப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் பெரேரா 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் ஓய்வறைக்கு திரும்பினார்.

பின்னர் களம் நுழைந்த ரொஷேன் சில்வா 22 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள போட்டி நிறைவுக்கு வந்தது.

மே.தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>