வடக்கு மற்றும் கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். north east public land release government plan Tamil latest news
வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு குறித்து எமது செய்திச் சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கு தடையற்ற விதத்தில் காணி விடுவிப்பு இடம்பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 276.94 ஏக்கர் அரசாங்கக் காணியையும், 144 ஏக்கர் தனியார் காணியையும் விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 290 ஏக்கர் அரச காணியையும், 192 ஏக்கர் தனியார் காணியையும் விடுவிக்க ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் 15 ஆம் திகதிவரை 735.15 ஏக்கர் காணி வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
north east public land release government plan Tamil latest news
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com