Human Rights Commission Office connection shooting Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர், போராட்டக்காரர்களை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது குறித்து தேசிய, மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
13 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடம், கிராம மக்கள் தீ வைத்ததாகக் கூறப்படும் வாகனங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டனர். அவர்களது சந்தேகங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கமளித்தார்.
Human Rights Commission Office connection shooting Thoothukudi
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :