இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரோஹித்!

0
564
afghanistan challenge vs India Rohit Sharma

(afghanistan challenge vs India Rohit Sharma)

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு, சவால் விடுக்கக்கூடிய வீரர்கள் தொடர்பில் இந்திய அணியின் உப தலைவர் ரோஹித் சர்மா கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் விளையாடும் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீட் கான் மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகியோரது பந்து வீச்சு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலை முன்னிறுத்தியுள்ளது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

குறித்த வீரர்கள் இருவரும் ஐ.பி.எல். தொடரில் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து இந்த ஐ.பி.எல். தொடரில் 35 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

“ ரஷீட் கான் மற்றும் முஜிபூர் ரஹ்மான் ஆகிய இருவரும் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் பந்து வீச்சளார்கள். அவர்கள் நினைத்தப்படி பந்தினை வீசக்கூடியவர்கள். அவர்களின் பந்து வீச்சு பாணி துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய சவால்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சுழற்பந்து வீச்சை இலகுவாக எதிர்கொள்ள கூடியவர்கள். அதுவும் நமது சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறும் போது, இந்திய வீரர்களுக்கு இலகுவான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியும்” எனவும் ரோஹித் சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோஹித் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் குழாமில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>