தனஞ்சயவின் சுழலில் சிக்கிய மே.தீவுகள் பதினொருவர் அணி!

0
301
west indies president XI vs Sri Lanka practice match 2018

(west indies president XI vs Sri Lanka practice match 2018)

மே.தீவுகள் பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின் போது, மே.தீவுகள் பதினொருவர் அணி 223 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்துள்ளது.

இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மே.தீவுகள் சென்றுள்ளது.

இதில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 428 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணிசார்பில் முதல் ஆட்ட நிறைவில் சந்திமால் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, நேற்றைய தினம் டிக்வெல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டிக்வெல்ல 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் அகில தனஞ்சய 30 ஓட்டங்களையும், லஹிரு கமகே 22 ஓட்டங்களையும் நேற்றைய தினம் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

மே.தீவுகள் அணியின் பந்து வீச்சில் ஹரிகன் 4 விக்கட்டுகளையும், கார்ன்வேல் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆரம்பத்த பெற்றுக்கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கெம்பல் 60 ஓட்டங்களையும், பவெல் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

எனினும் தற்போது துடுப்பெடுத்தாடி வரும் கார்ன்வேல் 23 ஓட்டங்களையும், ஹரிகன் 8 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் அகில தனஞ்சய 3 விக்கட்டுகளையும், லஹிரு குமார் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

<<Tamil News Group websites>>