திசர பெரேராவின் அதிரடி வீண்! : வென்றது மே.தீவுகள்!

0
702
West indies beat World XI 2018 news Tamil

(West indies beat World XI 2018 news Tamil)

மே.தீவுகள் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 நேற்று இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மே.தீவுகள் அணி 72 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களமிறங்கிய கெயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் லிவிஸ் அதிரடியை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தார்.

கெயில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, லிவிஸ் 26 பந்துகளுக்கு 58 ஓட்டங்களையும், சேமியல்ஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ராம்தீன் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 199ஆக உயர்த்தினர்.

பந்து வீச்சில் ரஷீட் கான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது.

ஒரு கட்டத்தில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் களம் நுழைந்த திசர பெரேரா அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார்.

திசர பெரேரா 37 பந்துகளுக்கு 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் உலக பதினொருவர் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை மே.தீவுகள் அணியின் லிவிஸ் பெற்றுக்கொண்டார்.

<<Tamil News Group websites>>