சவுதியை கௌரவித்த “வோக்” இதழ்

0
731
VOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT

VOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வோக் சவுதி அரேபிய இதழ் தனது ஜூன் பதிவை சவுதிஅரேபியாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இதழின் அட்டை படத்தில் நட்சத்திரமாக HRH ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்றுள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் 2015இல் மரணம் அடைந்தார்.

இந்த அட்டை படத்தில் சவுதி இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

 

VOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT