மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை வௌியேற வலியுறுத்தல் – டயர் எரித்து ஆர்ப்பாட்டம்

0
97
Tired burning people temporary places victims threatened landslide

(Tired burning people temporary places victims threatened landslide)

மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்திருந்த தற்காலிக இடங்களில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியமையால் தோட்ட மக்கள் டயர் எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பொகவந்தலாவ ரொப்கில் கிழ் பிரிவு தோட்டத்தில் மணி சரிவில் பாதிக்கப்பட்ட 03 முன்று குடியிருப்பாளர்களை சேர்ந்த 15 பேரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது.

அத்துடன் பாதிக்கபட்டவர்கள் பணி நிறுத்தப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேச மக்கள் இன்று தொழிலுக்கு செல்லாது தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(Tired burning people temporary places victims threatened landslide)

More Tamil News

Tamil News Group websites :