பேங்கொக் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

0
375
Qantas emergency Landing

Qantas emergency Landing

குவாண்டஸ் விமானமொன்றி சுமார் 20 நிமிடம் வானில் வட்டமிட்டு பின்னர் அவசரமாக சிட்னி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு சிட்னியை சுமார் 20 நிமிடங்கள் வரை வட்டமிட்ட பின்னரே குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

பேங்கொக் நோக்கி புறப்பட்ட குறித்த விமானம் சிறிது நேரத்திலேயே தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிட்னி நேரப்படி நண்பகல் 1.30 மணியளவிலேயே தரையிறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கியவுடன், அவசர சேவைகள் அருகிலேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அனைவரும் வேறொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.