ஆர்ஜன்டீன வீரரை இலகுவாக வீழ்த்திய நடால்!

0
619
French Open 2018 Rafael Nadal news Tamil

(French Open 2018 Rafael Nadal news Tamil)

பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் வெற்றிபெற்றுள்ளார்.

ரபேல் நடால் இரண்டாவது சுற்றில் ஆர்ஜன்டீன வீரர் கயிடோ பெல்லாவை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய நடால் 3-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தார்.

முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், அடுத்த இரண்டு செட்களையும் 6-1 மற்றும் 6-1 என இலகுவாக கைப்பற்றினார்.

நடால் அடுத்த சுற்றில் பிரான்சின் ரிச்சர்ட் கஸ்கார்ட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

French Open 2018 Rafael Nadal news Tamil