நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!

0
1082
arrested plotting attacks malaysia, malaysia tami news, malaysia, malaysia news, malaysia,

{ arrested plotting attacks malaysia }

மலேசியாவில் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இல்லத்தரசி. இன்னொருவர் 17 வயது மாணவர்.

மேலும், பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 27ஆம் திகதியிலிருந்து கடந்த மாதம் 9ஆம் திகதிவரை கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர், கிளந்தான், சபா ஆகியவற்றில் சோதனை நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர்.

பொதுத்தேர்தலின்போது காரில் எரிகலன் கொண்டு தாக்குதல் நடத்த அந்த இல்லத்தரசி திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறை தலைமை அதிகாரி முகம்மது ஃபாஸி ஹரூன் (Mohd Fuzi Harun) தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள கேளிக்கை நிலையங்கள், தேவாலயங்கள், கோவில்கள் போன்ற இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

புக்கிட் பிந்தானில் உணவக உரிமையாளரான 41 வயது பங்களாதேஷ் ஆடவரும் ஆயுதங்களைக் கடத்தியதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தம்பதியரும் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனர். ஐ எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தோர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Tags: arrested plotting attacks malaysia

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!

*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்

*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!

*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!

*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!

*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!

*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!

*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!

*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>