இன்றைய ராசி பலன் 31-05-2018

0
681

(Today horoscope 31-05-2018 )

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி,
31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை;
அதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00-10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : ரோகிணி
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.

மேஷ ராசி நேயர்களே !
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே !
அலைபேசிவழித் தகவலால் ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம் ராசி நேயர்களே !
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். தொழிலில் இருந்த பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.

கடக ராசி நேயர்களே !
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

சிம்ம ராசி நேயர்களே !
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பலரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
புதிய முயற்சிகளில வெற்றி கிட்டும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே !
வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மங்கல காரியங்கள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனுசு ராசி நேயர்களே !
செல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி பலன் தரும். பொருள் வரவு திருப்தி தரும். ஆடை – அணிகலன்கள் வாங்குவதில் பிரியம் செலுத்துவீர்கள்.

மகர ராசி நேயர்களே !
உத்தியோக முயற்சி வெற்றி தரும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாங்கிய கடனைத்திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பு உண்டு. மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். முக்கியப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆதாயம் தரும் விதத்தில் அலைச்சல் ஏற்படலாம்.

மீனம் ராசி நேயர்களே !
வாரிசுகளால் பெருமை ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். சுபச்செலவு உண்டு.

எமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 31-05-2018