பதவி விலகுகிறார் திலங்க சுமதிபால…? : வெளியாகியுள்ள புதிய தகவல்!!!

0
311
thilanga sumathipala resigns

(thilanga sumathipala resigns)

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து திலங்க சுமதிபால விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை திலங்க சுமதிபால இராஜினாமா செய்யும் பட்சத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கிரிக்கெட் சபையினை ஏற்று நடத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கிரிக்கெட் சபையை வழிநடத்த வேண்டும் என்ற காரணத்தால், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரை நியமிக்க அமைச்சர் பைசர் முஷ்தப்பா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபையை 12 வாரங்களுக்கு கலைக்காமல் இருப்பதற்கான கடிதம் ஒன்றை கிரிக்கெட் சபை நேற்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைத்ததாகவும், திலங்க சுமதிபால உள்ளிட்ட கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சமூகமளித்திருந்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எவ்வாாறாயினும் இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

<<Tamil News Group websites>>

thilanga sumathipala resigns