சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசியா அரசு திட்டம்

0
722
malaysia build island waters near singapore

(malaysia build island waters near singapore)
மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகமது, தென்சீன கடல் பரப்பில் சிங்கப்பூருக்கு அருகே உள்ள மிடில்ராக்கில் ஏற்கனவே கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் படி, மலேசியாவுக்கு சொந்தமான மிடில்ராக்கிற்கு அருகே ஒரு குட்டித் தீவை மலேசிய அரசு உருவாக்கும் என்றும் மகாதீர் தெரிவித்தார். ஏற்கனவே கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை ரத்து செய்துள்ள மகாதீர் முகமது, இப்போது குட்டித் தீவான சிங்கப்பூருக்கு போட்டியாக மற்றொரு தீவை உருவாக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

malaysia build island waters near singapore