இளவரசி மேகனின் முதல் திருமணத்தில் இப்படியெல்லாம் நடந்ததா? : விடிய விடிய நடந்த கூத்துக்கள் அம்பலம்

0
674
Harry Megan Wedding News

Harry Megan Wedding News

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

வயது வித்தியாசம், ஏற்கனவே திருமணமான பெண் என பல சர்ச்சைகளையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது.

ஹரி – மேகன் திருமணம் நிகழ்வை உலகமே பார்த்து ரசித்த நிலையில், மேகனின் முதல் திருமணம் தொடர்பான சில சுவாரஸ்ய செய்திய்கள் வெளியாகியுள்ளன.

மேகனின் முதல் திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஹொலிவுட் தயாரிப்பாளரான டிரவர் எங்கெல்சனை காதலித்து மணம் முடித்திருந்தார் அவர்.

சுமார் 7 வருடங்கள் காதலித்த அவர்கள் 2010 இல் நிச்சயம் செய்துகொண்டனர்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி ஜெமெய்காவில் இத்திருமணம் நடைபெற்றிருந்தது.

சுமார் நான்கு நாட்கள் நடைபெற்ற திருமண நிகழ்வில் 102 பேர் கலந்துகொண்டிருந்தனர்.அந்த திருமணத்துக்கு சென்றிருந்த விருந்தினர்கள், இந்நிகழ்வு சொற்ப நேரமே நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்நிகழ்வு நடைபெற்றதாக அங்கு சென்றோர் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் களியாட்டங்கள் ஆரம்பமானதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அனைவருக்கும், பாபர்கியூ விருந்தை மேகன் மற்றும் அவரது முன்னாள் கணவர் அளித்ததாகவும், இது இரவையும் தாண்டி நீடித்ததாகவும் விருந்தினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பலர் களியாட்டங்களையே அங்கு விரும்பியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த தம்பதிகள் இருவரும், 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விவாகரத்து செய்திருந்தனர்.

கருத்து வேறுபாட்டைக் காரணமாகக் கூறியே இருவரும் பிரிந்திருந்தனர்.

எனினும் மேகன் நடிப்பை தேர்ந்தெடுத்தமையே இதற்கான காரணமென வேறு சிலர் தெரிவித்திருந்தனர்.

திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னரே அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

7 வருடங்கள், காதலித்த போதிலும் , மேகனுக்கு வாய்ப்பு கிடைத்த பின்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் எழ ஆரம்பித்துள்ளது.

மேலும் மேகன் கனடாவில் டொரண்டோவிலும், அவரது கணவர் லொஸ் ஏஞ்சல்சிலும் இருந்ததால், இருவருக்கும் இடையேயான நெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவே பிரிவுக்கான மூலகாரணமென தெரிவிக்கப்படுகின்றது.

மேகன் நடிகையான பின்னர் கிடைத்த புகழே அவர் பிரியவும் காரணமாக இருந்ததாக அவரது நீண்டகால தோழியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.