பதினைந்து வருடங்களில் முதல் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சிசாலையில் நிகழ்ந்த அதிசயம்!

0
774
Arctic wolf pups born Toronto Zoo

Arctic wolf pups born Toronto Zoo

பதினைந்து வருடங்களில் முதற் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சி சாலையில் ஆர்டிக் ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன.

சுமார் 6 குட்டிகளை அங்கிருந்த ஆர்டிக் ஓநாய் ஈன்றுள்ளது. எனினும் இவ் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 8 முதல் 12 வாரங்களின் பின்னரே அவை முழுமையாக குகையிலிருந்து வெளியே வருமென மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மிருகக்காட்சிசாலைக்கு வரும் பார்வையாளர்கள் குட்டிகள் வெளியுலகிற்கு பழகும் வரை சத்தமோ, கூச்சலோ இட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.