பயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்!

0
597
Sri Lanka vs West Indies President XI 2018

(Sri Lanka vs West Indies President XI 2018)

இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான பயிற்சி போட்டி நேற்று ஆரம்பித்தது.

மே.தீவுகள் ஏ மற்றும் இலங்கை அணிகள் மோதிய இந்த பயிற்சிப்போட்டியில் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பாக துடுப்பெடுத்தாடாத போதும், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் போது தினேஷ் சந்திமால், 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 216 பந்துகளுக்கு 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மறுமுனையில் குசல் பெரேரா 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், மெத்தியூஸ் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்திருந்தார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய நிரோஷன் டிக்வெல்ல 28 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் கார்ன்வேல் மற்றும் வரிகன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

<<Tamil News Group websites>>