இந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி!

0
876
Pic from Ari Kala/Caters News

Australia Ari Kala

பெண்ணொருவர் தான் விசேட சக்தியொன்றைப் பெற்றுள்ளதாகக் கூறி உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அரி கலா என்ற 24 வயதான அப்பெண், மனிதனொருவன் எப்போது உயிரிழக்கப்போகின்றார் என தன்னால் கூற முடியுமெனக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நபரொருவன் எப்போது உயிரிழப்பான் என அவன் உடலிலிருந்து வீசும் வாசத்தைக் கொண்டு தன்னால் கூறமுடியுமென அப்பெண் தெரிவித்துள்ளார்.

அவரது இவ்வறிப்பு கேட்போரை சற்று ஆடித்தான் போகச் செய்துள்ளது.

அவர் 12 வயதாக இருக்கும் போது தமது மாமாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு ஒருவிதமான வாசத்தை உணர்ந்துள்ளார். அவர் அதன்போது மரணப் படுக்கையில் இருந்துள்ளார். அவர் உணர்ந்த அந்த மணத்தை வேறு யாராலும் உணர முடியவில்லை.

அதற்கு அடுத்த நாள் அவரது மாமா உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னரே அவருக்கு இவ்வாறான ஒரு ஆறாவது உணர்வு இருப்பதை அறிந்துகொண்டுள்ளார்.

முதல் சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இவ்வாறான அனுபவங்களுக்கு அவர் முகங்கொடுத்துள்ளார். நீண்டநாள் நோயாளிகள், வயது முதிர்ந்தோரிடம் இவ்வாறான வாசனையை அவர் உணர்ந்துள்ளார்.

எனினும், அவர்களிடம் இது தொடர்பில் எதையும் சொல்வதில்லையாம். ஏனெனில் அவ்வாறு கூறுவதைத்தவிர தன்னால் எதையும் செய்ய முடிவதில்லை என தெரிவித்துள்ளார்.

இப்பெண் ஆத்மாக்களுடன் பேசும் ஆற்றலையும் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.