உலக பதினொருவர் அணியின் தலைவராக அப்ரிடி!!!

0
478
World xi vs West Indies 2018 news Tamil

(World xi vs West Indies 2018 news Tamil)

உலக பதினொருவர் மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான கண்காட்சிப் போட்டி நாளை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியின் உலக பதினொருவர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த இயன் மோர்கன் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக தலைமை பொறுப்பை அப்ரிடி ஏற்றுள்ளார்.

இயன் மோர்கனுக்கு பதிலாக இங்கிலாந்தின் இளம் வீரர் செம் பில்லிங்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உலக பதினொருவர் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான செம் கலன் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

உலக பதினொருவர் மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான கண்காட்சி கிரிக்கெட் டி20 போட்டி நாளை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் மே.தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் விளையாடுவதுடன், உலக பதினொருவர் அணியிலும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முன்னணி வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

<<Tamil News Group websites>>

World xi vs West Indies 2018 news Tamil