சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!

0
848
tell truth said true event chennai tamilnadu

tell truth said true event chennai tamilnadu

‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ண்ன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சாதாரண குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தீர்வு வழங்கப்படும். இவ்வாறு நிகழ்ச்சி நடைபெறும் போது அவ்வப்போது இருதரப்பினருக்கிடையே சண்டை வருவதும் வழக்கம். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு இருப்பது போல் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் இருந்து வந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், இந்நிகழ்ச்சி ஏழை மக்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளை பாதிக்கிறது என்றும் , அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் விவாதிக்கும்போது மற்றொரு தரப்பினரின் உரிமை பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த முரளிதரன், கிருஷ்ணசாமி ஆகிய இரு நீதிபதிகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு  ஜூன் 18 – ம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும்  `ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :