நெஸ்லே நிறுவனத்தில் பணி புரியும் 500 பேரின் வேலை பறி போகும் நிலை !!

0
657
Swiss food giant company unemployment, Swiss food giant company, Swiss food giant, food giant company unemployment, giant company unemployment, Tamil Swiss News, Swiss tamil news

(Swiss food giant company unemployment)

பாரிய சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் 500 கணினி சேவை வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது இலாபத்தை அதிகரிக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் படி, நெஸ்லே நிறுவனமானது IT வேலைகளை ஸ்பெயினில் உள்ள வெளியார் நிறுவனத்திடம் (outsourcing) ஒப்படைக்கவுள்ளது.

“எங்கள் ஊழியர்களுக்கு இது கடினமான நேரம் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று நெஸ்லேயின் மனித வளத்துறை தலைவர் Peter Vogt கூறினார்.

நெஸ்லேயின் காபி மற்றும் நெஸ்பிரெஸோ பிரிவுகளும் கூட, சுவிஸ் வேலைகளை ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலுக்கு மாற்றம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கையானது மேலும் 80 ஊழியர்களை பாதிக்கும், எனினும் இந்த மறு சீரமைப்பினால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புதிய இடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் எனக் கூற்றப்படுகிறது.

வெட்டுக்கள்இந்த வேலை குறைப்புக்கள் அடுத்த 18 மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். “நெஸ்லே சுவிட்சர்லாந்தில் தனது வீட்டுத் தளத்திற்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது. நெஸ்லே மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான உறவு பரஸ்பர ஆதாயமாக உள்ளது, ” என Vogt கூறினார்.

Swiss food giant company unemployment, Swiss food giant company, Swiss food giant, food giant company unemployment, giant company unemployment, Tamil Swiss News, Swiss tamil news

Tamil News Groups Websites