சத்தமில்லாமல் சாதனைப்படைத்த சென்னை வீரர்!!!

0
504
Karn Sharma First Player Win Hat-trick IPL Titles

(Karn Sharma First Player Win Hat-trick IPL Titles)

ஐ.பி.எல். தொடரில் இம்முறை சென்னை அணியில் விளையாடிய வீரர் கரன் சர்மா எந்தவொரு வீரரும் படைக்காத புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். தொடர்களில் தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி, ஹெட்ரிக் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

கரன் சர்மா 2016ம் ஆண்டு சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தொடர்ந்து கடந்த வருடம் மும்பை அணிக்காக விளையாடினார். தற்போது சென்னை அணிக்காக விளையாடினார்.

இந்த மூன்று அணிகளும் தொடர்ந்து சம்பியன் கிண்ணங்களை வென்றுள்ளதுடன், மூன்று கிண்ணங்களை கைப்பற்றும் அணிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இதன்மூலம் ஹெட்ரிக் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணங்களை கைப்பற்றிய ஒரே ஒரு வீரராக இவர் பதிவாகியுள்ளார்.

இந்த தொடரில் ஒவ்வொரு இடைக்கிடையில் ஒவ்வொரு போட்டிகளில் விளையாடிய கரன் சர்மா, இறுதிப்போட்டியில் விளையாடி முக்கிய விக்கட்டான வில்லியம்ஸனின் விக்கட்டினை வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>