நாடே உறையப்போகின்றது!

0
343
Australia Weather

Australia Weather

இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை – 3 அளவுக்கு குறையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி கென்பெராவில் வெப்பநிலை – 1 பாகை செல்சியசாக இருக்குமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலையுதிர் காலத்தின் கடைசி காலப்பகுதியும், மெல்பேர்னில் குளிராக இருக்குமெனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 பாகை செல்சியஸ் முதல் 9 பாகை செல்சியஸ் வரை இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் வட கிழக்கு மற்றும் எல்பைன் பிராந்தியங்கள், குளிரால் உறையுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குளிர் நிலை ஒகஸ்ட் மாத இறுதிவரை நீடிக்குமெனவும், சராசரியான குளிர்காலம் விக்டோரியாவில் ஏற்படுமெனவும் கூறப்படுகின்றது.

குளிரான தலைநகராக கென்பெரா இருக்குமெனவும், அங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை வெப்பநிலை – 1 பாகை செல்சியசாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.