த.வா.க தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

0
548
T.V.K leader Velmurugan allowed intensive care unit

T.V.K leader Velmurugan allowed intensive care unit

13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய், நிவாரண உதவி வழங்கக் கோரியும், துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அனைவரையும் கைது செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், கடந்த 25-ம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த 3 நாட்களாக தனது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறையிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டார். நேற்று, அவரை புழல் சிறையில் சந்தித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நேரில் வலியுறுத்தியதையடுத்து, வேல்முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு, மருத்துவர்கள் மாற்றியுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :