தூத்துக்குடி சம்பவம் – புதிய வீடியோவை வெளியிட்ட தமிழக காவல்துறை!

0
676
Thoothukudi incident - Tamil Nadu Police released new video

Thoothukudi incident – Tamil Nadu Police released new video

தூத்துகுயடியில் கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியின்போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவு பிறப்பித்தது என்ற கேள்வி எழுந்தது. தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள், கண்ணன் மற்றும் சேகர் உத்தரவின் பெயரிலேயே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இருவரும் அளித்த புகாரின் பெயரில் 12 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பான புதிய வீடியோக்களை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரை தாக்குவது போன்றும், ஸ்டெர்லைட் குடியிருப்பிலுள்ள கார்களுக்கு தீ வைப்பது போன்றும், காவல்துறை வாகனங்களை தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

More Tamil News

Tamil News Group websites :