பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே இதற்கு காரணம்

0
385
Lankan southern province baby children virus effect death reason

இனங்காணப்படாத பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடே தென் மாகாணத்தில் சிறுவர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். Lankan southern province baby children virus effect death reason

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மருத்துவ துறையினர் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வைரஸ் காரணமாக தென் மாகாணத்தில் 12 வயதிற்கும் குறைந்த 11 சிறுவர்கள் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Lankan southern province baby children virus effect death reason

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.