பல வருடங்களாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் – பொலிசாரின் சுற்றிவளைப்பில் கைது

0
443
Lankan police round one women arrest maligawatta spokesmen

மாளிகாவத்தை பகுதியில் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Lankan police round one women arrest maligawatta spokesmen

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிடமிருந்து செயற்கை போதை மாத்திரைகள், கொக்கேய்ன் மற்றும் ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 38 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 89 செயற்கை போதை மாத்திரைகளும், 9 கிராம் கொக்கோய்னும், 7 கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் என்பன காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் பல வருடங்களாக தடைசெய்யப்பட்ட போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Lankan police round one women arrest maligawatta spokesmen

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை