12 இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

0
116
foreign ministry action Somalia pirates release tamil news

சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களையும் நாட்டிற்;கு அழைத்துவரும் நடவடிக்கைகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது. foreign ministry action Somalia pirates release tamil news

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பிரச்சினைகளால் நிர்கதியான குறித்த இலங்கையர்களை மீட்பதற்காக அடிஸ் அபாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச குடியேறிகளுக்கான ஒழுங்கமைப்பு என்பவற்றின் ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 12 பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கப்பல் ஒன்றினை முற்றுகையிட்ட சோமாளிய கடற்கொள்ளையர்கள் அதில் பணியாற்றிய 3 இலங்கையர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்து பின்னர் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
foreign ministry action Somalia pirates release tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை