இங்கிலாந்தில் அழிக்கப்பட்டவை இலங்கையின் போர் குற்ற ஆவணங்களா?

0
689
England Commonwealth Office Destroyed 195 Documents Issue

(England Commonwealth Office Destroyed 195 Documents Issue)

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள காமன்வெல்த் அலுவலகத்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை குறித்த அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.

இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம்.

இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கிலாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும்.

மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.

இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.

ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்