Emirates EK 348 விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது

0
484
gold smuggling one person arrest katunayaka airport

சட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகளை நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். gold smuggling one person arrest katunayaka airport

இவர் இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 1.55 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வந்த Emirates விமான சேவைக்கு சொந்தமான EK 348 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 200 கிராம் எடை கொண்ட 2 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 13,60,000 ரூபாய் பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் விதிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
gold smuggling one person arrest katunayaka airport

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

The post மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் appeared first on TAMIL NEWS.