ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பு – மு.க.ஸ்டாலின்!

0
725
sterlite plant can not just watch - m.k.stalin

sterlite plant can not just watch – m.k.stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிட்டதில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறினார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து அமைச்சரவையை கூட்டி அரசாரணை பிறப்பித்திருந்தால் சந்தேகம் எழுந்திருக்காது, என்று கூறிய அவர்,  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவையே அரசாணையாக வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.  துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான டிஜிபி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பேரவை கூடுகிறது, சட்டப்பேரவையில் திமுக இப்பிரச்னையை எழுப்பும் என்பதற்காகவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்றதாகவும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :