தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து யாழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
465
minimum cut out marks released examination department

(TAMILNEWS Jaffna University honor 13 people shot dead Tuticorin)

தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெரலைட் செப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்ற தமிழகப் பொலிஸாரின் வெறிச் செயலைக் கண்டித்தும் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் இன்று (28) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உட்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

படுகொலைக்கு எதிராக ஒன்று திரள்வதற்காக அனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒண்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(TAMILNEWS Jaffna University honor 13 people shot dead Tuticorin)

More Tamil News

Tamil News Group websites :