தமிழ் – சிங்கள மக்களை பிளவுபடுத்துவதே சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரனின் நோக்கம் – மைத்திரி குணரத்ன குற்றச்சாட்டு

0
469
Sumanthiran Wigneswaran should not set up Viharas in the North

(Sumanthiran Wigneswaran should not set up Viharas in the North)

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் வடக்கில் விகாரைகளை அமைக்க கூடாது என்று தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களின் நோக்கம் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் பிளவு படுத்துவதேயாகும்.

எந்த ஒரு சமயமாவது மக்களுக்கு தீமையானவற்றை போதிக்கவில்லை. அது பௌத்தம் என்றாலும் சரி இந்து சமயம் என்றாலும் சரி இஸ்லாம் சமயம் என்றாலும் சரி எல்லா சமயங்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கே போதிக்கின்றன.

அப்படி என்றால் ஏன் நாம் சமயத்தால் வேறு பட வேண்டும். இன்று சுமார் 3500 குடும்பங்கள் தான் காலியில் வாழ்கின்றனர்.

ஆனால் அங்கு நுழையும் போதே ஒரு இந்து கோயில் தான் இருக்கின்றது. அதனை எவராவுது உடைக்க முற்படுகிறார்களா? மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை பிரிவினை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் நினைகின்றார்கள்.

அவ்வாறு செய்தால் தான் அவர்களுக்கு பாராளுமன்றம் செல்லலாம். அதற்காக அவர்கள் மக்களை அடிமைகயாகவும் ஏழைகளாக வைத்திருக்கினறார்கள்.

சமயங்களை அடிப்படையாக கொண்டு மக்களை பிளவுபடுத்த நினைததால் அதற்கு ஒரு போதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் பொது செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னேடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர் கிசான் தலைமையில் 27.05.2018 அன்று அட்டன் இலங்கை திறந்த பல்கலைகழக கிளை கேட்போர் கூடத்தில் நடபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.

இந்த நிகழ்வில் நிரோதா எனும் நோயற்ற வாழ்க்கை மற்றும் பொருளாதார மேம்பாட்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வுக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மற்றும் நகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(Sumanthiran Wigneswaran should not set up Viharas in the North)

More Tamil News

Tamil News Group websites :