கூட்டணிக்குத் தயார் : ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!

0
612
ready Prepared coalition - one condition

ready Prepared coalition – one condition

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில தேர்தல்கள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை மாயாவதி எடுத்துள்ளார்.

தலித் சமுதாயத்தினரை பெரும்பான்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. இது உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, ஹிமாச்சல், மத்தியப்பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் வாக்கு வங்கி வைத்துள்ளது.

2019ல் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ள சூழலில் இது தொடர்பான வியூகங்களை தற்போது எதிர்கட்சிகள் முன்னெடுத்துள்ளன.

இதனிடையே காங்கிரஸுக்கு அடுத்தபடியாக மிக முக்கிய தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் 3வது அணி அமைய வேண்டுமென்றும் மாநிலக் கட்சிகள் அதற்கு வலுவூட்ட வேண்டுமென்றும் பேசியுள்ளார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாயாவதி தன்னுடைய கட்சி கூட்டணிக்கு தயார் என்றும் ஆனால் எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை கிடைத்தால் மட்டுமே அதற்கு உடன்பட முடியும் என்றும் கூறியுள்ளார்.

கூட்டணி தொடர்பாக தற்போது ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் தேர்தலுக்கு முன்னரே அதிக இடங்களை தங்கள் கட்சிக்கு அளிக்க கூட்டணி கட்சிகள் உடன்பட வேண்டும், இல்லையென்றால் தனித்துப் போட்டியிட தயாராக இருப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கட்சியின் தேசியத் துணைத் தலைவராக மாயாவதியின் சகோதரரை அவர் நியமித்தார், இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மூத்த தலைவர்களான நசீமுதின் சித்திக், ஸ்வாமி பிரசாத் மவுர்யா, இந்திரஜித் சரோஜ் மற்றும் ஜுகுள் கிஷோர் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறினர்.

குடும்ப ஆட்சி முறையை மாயாவதி கையிலெடுக்கிறார், என்ற பேச்சு எழுந்ததாலும், அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறுவோரை தடுக்கும் வகையிலும் தன் சகோதரரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

பாஜக அல்லாத கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி நிறுத்தப்பட வேண்டுமென்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :