துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கன்னியாகுமரியில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்!

0
794
people strike kanyakumari protesting gunfire

people strike kanyakumari protesting gunfire

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 100வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பேரணியைக் கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு போட்டது.

இந்நிலையில் தடையை மீறி பேரணியாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் போலீஸ் தடியடி காரணமாக படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குரும்பனை கடற்கரையில், கையில் கருப்புக்கொடியுடன் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மக்கள் விரோத திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :