NLC tried commit suicide drinking pesticides workers
கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்ட காரணத்தால் அதைச் சார்ந்து பணிபுரிந்த சுமார் 40 பேருக்கு சீராக வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து கடந்த சில நாட்களாக அவர்கள் போராடி வந்த நிலையில், இன்று 20க்கும் மேற்பட்டோர் சுரங்கம் முன் போராடினர். அப்போது தொழிலாளர்கள் 6 பேர், தாங்கள் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்தனர். இதை அடுத்து அங்கிருந்த போலீஸார், உடனடியாக 6 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களது உடல் நிலை சீரடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- ஏரியில் சாயக்கழிவுகள் கலப்பதால் இறந்து மிதக்கும் மீன்கள்!
- ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!
- பேருந்து விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
- கோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி!
- பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக் கணக்கு முடக்கம்!