பிரான்ஸில் இலகுவில் பயணிக்க புதிய முயற்சி!

0
152
new travel plan introduce Ile-de-France Mobilités

இனிமேல் உங்கள் திறன்பேசி மூலமாகவே மாதாந்த நவிகோ உட்பட அனைத்து பயணச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என புதிய வசதி ஒன்று செயற்படுத்தப்பட இருக்கிறது. new travel plan introduce Ile-de-France Mobilités

இதனை இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைப்பான Ile-de-France Mobilités அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, Valérie Pécresse  ‘ஒவ்வொரு பயணிகளுக்கும் மிக அத்தியாவசியமான தேவை இது’ என குறிப்பிட்டுள்ளார்.

திறன்பேசிகளில் உள்ள புதிய வசதியான NFC மூலம் இந்த பயணச்சீட்டை பதிவு செய்துகொள்ள  முடிவதுடன், மெற்றோ, தொடரூந்து, ட்ராம் மற்றும் பேரூந்து சேவைகளில் இந்த வசதிகளை பயன்படுத்த முடியும்.

இதனால், மூன்று மில்லியன் பயணிகள் ஆரம்ப கட்டத்திலே பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இலையுதிர் காலம் முதல் இந்த வசதிகள் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**