கனடாவில் தெற்காசிய நாட்டவர்கள் இடையே பரபரப்பு

0
637

Mississauga Bombay Bhel Explosion

மிசிசாகுவாவில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து தெற்காசிய சமூகங்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்திய உணவகமொன்றிலேயே இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்ததுடன் இதில் 15 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

இக்குண்டு வெடிப்பை அடுத்து அங்கு பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.

இச்சம்பவத்தின் சூத்திரதாரி யாரென பல ஊகங்கள் வெளியிடப்படுகின்றமையானது பல்வேறு தரப்பினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

வெள்ளையர்களின் மேலாதிக்க மனோநிலை, இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் சீக்கிய தேசியவாதம் என பல காரணங்கள் குண்டுவெடிப்பின் பின்னணியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டன.

மேலும் இக்குண்டு வெடிப்பு தொடர்பில் இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டு வரும் தகவல்கள் கனடாவில் உள்ள சீக்கிய மதத்தவர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, ஒன்டாரியோ குருத்துவார் அமைப்பானது, இந்திய ஊடகங்களின் செய்தி அறிக்கையிடலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இச்செய்திகள் ஆதாரமற்றவை என அவை வர்ணித்துள்ளதுன.

மேலும் கனேடிய பிரதமரின் இந்திய விஜயத்தின் பின்னர் , இந்திய ஊடகங்கள் சீக்கியர்கள் தொடர்பில் காட்டு பாரபட்சமான செய்தியிடல் மற்றும் அதனை அப்படியே வெளியிடும் கனேடிய ஊடகங்கள் சிலவற்றால் கனாடாவில் உள்ள சீக்கியர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.